ஊத்துக்கோட்டை பேரூராட்சி முழுவதும் புகைபோக்கி மூலம் கொசு ஒழிக்கும் பணி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் கழிவறை கட்டிடம் கட்டவும் மற்றும் தினகரன் செய்தி எதிரொலியால் பேரூராட்சி முழுவதும் கொசு மருந்து தெளிக்கவும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் ரூ.20 லட்சத்தில் பொதுக்கழிப்பிடம் கட்டுதல், பேரூராட்சி முழுவதும் புகைபோக்கி மூலம் கொசு மருந்து தெளித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கடந்த 26ம் தேதி நமது தினகரன் நாளிதழில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி 7வது வார்டு நேரு பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாவதாக செய்தி வெளியானது. இதையடுத்து அந்த பகுதியில் கொசு மருந்து தௌிப்பது என தீர்மான நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் கோகுல்கிருஷ்ணண் திமுக பேசும்போது, `ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தின் மீது 100 கிலோ வாட் சோலார் பேனல் அமைத்து மின்வாரியத்திற்கு கட்டும் பில்லை குறைக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தரும் மக்களுக்கு பரிசு வழங்க வேண்டும். மேலும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூற புகார் புத்தகம் வைக்க வேண்டும்’ என கூறினார். கோல்டுமணி திமுக கூறும்போது, `பாலாஜி நகர் சாலை, விவேகானந்தர் தெருவுக்கு கால்வாய் அமைக்க வேண்டும். ஊத்துக்கோட்டை புதிய பாலத்தின் அருகில் மின் விளக்கு அமைக்க வேண்டும்’ என்றார். ஜீவா திமுக கூறும்போது, `ஊத்துக்கோட்டை முழுவதும் சோலார் மின் விளக்குகள் அமைத்தால் கரண்ட் பில் செலவு குறையும்’ என கூறினார். இதில் திமுக கவுன்சிலர்கள் அபிராமி, கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, வெங்கடேசன், இந்துமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: