இந்திய வீரர்கள் ரத்தம் கொடுத்து காப்பாற்றிய பாக். தீவிரவாதி மாரடைப்பில் திடீர் சாவு

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த தபாரக் ஹுசைன் (32) என்ற தீவிரவாதி, காஷ்மீரில் ராணுவ முகாம்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்காக கடந்த மாதம் 21ம் தேதி அனுப்பப்பட்டான். ராஜோரி எல்லையில் காஷ்மீருக்குள் நுழைய முயன்ற அவனை, இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த அவனை, ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அவனுக்கு அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டதால், இந்திய ராணுவ வீரர்களே ரத்தம் கொடுத்து காப்பாற்றினர். தீவிரவாதியிடம் இந்திய வீரர்கள் காட்டி இந்த மனித நேயம், உலகளவில் பெரும் பெரும் பாராட்டை பெற்றது.

பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகளும், பாகிஸ்தான் ராணுவ கர்னல் ஒருவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து, இந்தியாவில் தற்கொலை  தாக்குதல் நடத்த சொன்னதாக தபாரக் வாக்குமூலம் அளித்தான். இந்நிலையில், தீவிர சிகிச்சையில் உடல் நிலை தேறி வந்த தபாரக், நேற்று திடீரென மாரடைப்பால் இறந்தான். இது, அவனை ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய வீரர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: