தமிழ்நாட்டில் விருதுநகர், வேலூர் உட்பட 6 மாநிலங்களில் 8 தொகுதியில் இவிஎம்களை சரிபார்க்க மனு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் விருதுநகர், வேலூர் உட்பட 6 மாநிலங்களில் 8 தொகதிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிக்கப்பட்ட மைக்ரோ கன்ட்ரோலர் சிப்களை சரிபார்க்க தேர்தல் ஆணையத்தில் பாஜ, காங்கிரஸ் கட்சிகள் மனு செய்துள்ளன. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கு மத்தியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தை ஆதாரமற்றது என உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், தேர்தலில் 2, 3ம் இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் ஒரு சட்டமன்ற தொகுதியில் 5 சதவீத வாக்கு இயந்திரங்களில் பதிக்கப்பட்ட மைக்ரோ கன்ட்ரோலர் சிப்களை சரிபார்க்க தேர்தல் ஆணையத்தை நாடலாம் என அனுமதி வழங்கியது.

அதன்படி, எந்தெந்த மாநிலத்தில், எந்த கட்சிகள் மைக்ரோ கன்ட்ரோலர் சிப்பை சரிபார்க்க எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளன என்ற விவரத்தை தலைமை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. ஆந்திரா, சட்டீஸ்கர், அரியானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருக்கும் 8 மக்களவை தொகுதிகளில் மனு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை பொருத்தமட்டில், வேலூர் தொகுதியில் வேலூர், அணைகட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஆறு வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலர்களை மறுஆய்வு செய்ய பாஜ தரப்பிலும், விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பிலும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் விருதுநகர், வேலூர் உட்பட 6 மாநிலங்களில் 8 தொகுதியில் இவிஎம்களை சரிபார்க்க மனு appeared first on Dinakaran.

Related Stories: