ஆந்திர மாநில புதிய டிஜிபி நியமனம்

திருமலை: ஆந்திர மாநில புதிய டிஜிபியாக துவரகா திருமலாவை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக கமிஷனராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி துவரகா திருமலா ராவ் பணியாற்றி வந்தார். இவரை ஆந்திர மாநில புதிய டிஜிபியாக நேற்றுமுன்தினம் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தில் 1989 ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர் ஆவார். தற்போது டிஜிபியாக உள்ள ஹரிஷ் குப்தா மீண்டும் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஆந்திர மாநில புதிய டிஜிபியாக நியமனம் செய்யப்பட் துவரகா திருமலா நேற்று பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு அனைத்து அதிகாரிகள் மற்றும் போலீசாரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஆந்திர மாநில புதிய டிஜிபி நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: