செல்போனில் தேவையற்ற வணிக அழைப்புகளை தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு: பொதுமக்கள் கருத்தை கேட்கிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: ஒன்றிய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைபேசி வாடிக்கையாளர்கள், தேவையற்ற மற்றும் தொல்லை தரக்கூடிய மார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்டவைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதில் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க புதிய வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி நிறுவனங்கள், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பர மற்றும் சேவை செய்திகள் போன்ற பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பான எந்தவொரு தகவல்தொடர்பும் வணிக தொடர்பு” என வரையறுக்கிறது. ஆனால் தனிப்பட்ட தகவல் தொடர்புகளுக்கு விலக்கு அளிக்கிறது. வாடிக்கையாளரின் விருப்பங்களின் அடிப்படையில் வணிகச் செய்திகளில் டிராய் விதிகளை மீறும் தகவல்தொடர்புகளுக்கும் தடை செய்யப்படுகிறது.

பெரும்பாலான செல் போன் பயனர்கள் டிராயின் ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’என்ற பதிவேட்டில் தங்கள் எண்களைப் பதிவு செய்த பிறகும் தேவையற்ற அல்லது தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பெறுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இதையடுத்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஜூலை 21க்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post செல்போனில் தேவையற்ற வணிக அழைப்புகளை தடுக்க புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு: பொதுமக்கள் கருத்தை கேட்கிறது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: