ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சித்த வைத்தியரை அங்கீகரித்து சான்றிதழ் வழங்க கோரி வழக்கு: மருத்துவ கவுன்சில் பரிசீலிப்பதாக தகவல்

மதுரை: பாரம்பரிய சித்த வைத்தியர்களை அங்கீகரித்து சான்றிதழ் வழங்குவது குறித்து மருத்துவ கவுன்சில் பரிசீலித்து வருவதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சித்த வைத்திய சங்க செயலாளர் குருநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் சங்கத்தில் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பாரம்பரிய சித்த வைத்திய முறைப்படி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்தியம் பார்த்து வருகிறோம். எங்களை ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் சித்த வைத்தியர்களாக பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்துள்ளோம்.

எங்கள் மனுவின் மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே, எங்களை சித்த வைத்தியர்களாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு சிறப்பு பிளீடர் பாலசுப்ரமணி ஆஜராகி, ‘‘மனுதாரர் ேகாரிக்கை குறித்த மனு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பரிசீலனையில் உள்ளது. மனுவின் மீது 6 வாரத்திற்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: