ரூ.455 கோடி லஞ்சம் மலேசிய முன்னாள் பிரதமர் மனைவிக்கு 10 ஆண்டு சிறை: ரூ.1,730 கோடி அபராதம்

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு 2 ஊழல் வழக்கில் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த வாரம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா, போர்னியோவில் உள்ள பள்ளியில் சூரியசக்தி மின்தகடுகள் அமைக்கும் பணி ஒப்பந்தத்ததுக்காக கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.120 கோடியும், மற்றொரு ஊழல் வழக்கில் ரூ.335 கோடியும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்த மலேசிய உச்ச நீதிமன்றம், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 வழக்குகளிலும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், ரூ. 1,730 கோடி அபராதமும் விதித்தது. இதையடுத்து, தனது கணவர் சிறை சென்ற ஒரு வார காலத்தில், நேற்று ரோஸ்மாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: