தேசிய பங்கு சந்தை முறைகேடு; சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றம்சாட்டியது. மேலும் நிதி மற்றும் வணிகத் திட்டங்கள் குறித்த தகவல்களை இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் ஜாமீன் கோரி சித்ரா ராமகிருஷ்ணா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனேனா சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சித்ரா ராமகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் மும்பை காவல்துறையின் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஜாமீன் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: