அந்தமான் சிறையில் இருந்து பறவை மீது ஏறி பறந்தார்; சாவர்க்கர் கர்நாடக பாட புத்தகத்தில் சர்ச்சை

பெங்களூரு: அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் அங்கிருந்து பறவை மீது ஏறி சொந்த ஊருக்கு சென்று மீண்டும் யாருக்கும் தெரியாமல் சிறைக்கு சென்றுவிடுவார் என்று கர்நாடக மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் சாவர்க்கர் ஒரு தேச பக்தர் என்றும் சுதந்திர போராட்ட தியாகி என்றும் அவரது படத்தை வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாவர்க்கர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது புல் புல் தாரா பறவை மீது ஏறி சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் யாருக்கும் தெரியாமல் காலையில் சிறைக்கு சென்றுவிடுவார் என்ற தகவல் அம்மாநில 8ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கருத்து அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தமான் செல்லுலார் சிறையில் புழு, பூச்சி கூட நுழைய முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், சாவர்க்கர் பறவை மீது ஏறி பறந்திருப்பார் என்று கூறப்பட்டுள்ளதற்கு ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். பாஜவினர் சாவர்க்கர் மீதான பக்தியின் உச்சக்கட்ட கட்டுக்கதை இது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: