ஆம்பூர் பரிதா குழுமத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

திருப்பத்தூர்: ஆம்பூரில் பரிதா குழுமத்தின் தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் 4வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல் மற்றும் காலணி தொழிற்சாலை என 10 இடங்களில் கடந்த 23ம் தேதி காலை 8 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வருமான வரித்துறை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 110 அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து 4வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலைகளில் கடந்த 10 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறித்த ஆவணங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர்.

மேலாளர்கள், காசாளர், அலுவலக ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகளுக்குள் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. 24 மணி நேரமும் சோதனை நடத்தும் தொழிற்சாலைகளில் துப்பாக்கி இந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: