கல்வி, கலாச்சாரப் பயணமாக புதுவை வந்துள்ள துருக்கி மாணவர்கள்!: சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி..!!

புதுச்சேரி: கல்வி மற்றும் கலாச்சாரப் பயணமாக புதுச்சேரி வந்துள்ள துருக்கி மாணவர்களுக்கு சுடு களிமண் பொம்மை செய்யும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து புதுச்சேரிக்கு கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலா வரும் மாணவர்கள், அம்மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துக் கொள்கின்றனர். அந்த வகையில் துருக்கி நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள 15க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள், பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுப்பெற்ற முனுசாமி பயிற்சி அளித்தார். யானை, குதிரை, விநாயகர் உள்ளிட்ட பொம்மைகளை செய்து மாணவர்கள் அசத்தினர். இதனை தொடர்ந்து கிராமப்புறங்களுக்கு செல்லவிருக்கும் துருக்கி மாணவர்கள், அங்குள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து தெரிந்துகொள்ள உள்ளனர்.

Related Stories: