ஜம்மு காஷ்மீரில் அரசு அதிரடி பண்டிட்டை சுட்டுக் கொன்ற தீவிரவாதியின் வீடு பறிமுதல்: தந்தை, 3 சகோதரர்கள் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பண்டிட்டை கொன்ற தீவிரவாதியின் வீட்டை அரசு பறிமுதல் செய்துள்ளது. அவனின் தந்தை, 3 சகோதரர்களையும் போலீசார் கைது செய்தனர். ஜம்மு காஷ்மீரில்  உள்ள சோபியான் கிராமத்தில் நேற்று முன்தினம் சுனில் குமார் பட் என்ற பண்டிட்டை அல் பதர் அமைப்பை சேர்ந்த அடில் வானி என்ற தீவிரவாதி சுட்டுக் கொன்றான். இந்த தாக்குதலுக்குப் பிறகு குத்போராவில் உள்ள தனது வீட்டில் அடில் பதுங்கி இருந்தபோது, வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி விட்டு அடில் தப்பினான்.

இதைத் தொடர்ந்து, அடிலின் தந்தை, 3 சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, சுனில் குமார் கொலையில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பிய தீவிரவாதிகள் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சோஜன் வனப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றிவளைத்தனர். இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது, தீவிரவாதிகள் தப்பினர். அவர்களை பிடிக்க, ரஜோரி முழுவதும் வலை வீசப்பட்டுள்ளது.

பூட்டிய வீட்டுக்குள்6 சடலங்கள் மீட்பு

ஜம்முவில் உள்ள சிட்ரா நகரில் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவர்கள் சாகினா பேகம், அவருடைய மகள்கள் நசீமா அக்தார், ரூபினா பானு, மகன் ஜபார் சலீம், உறவினர்கள் நூர் அல் ஹபீப், சாஜத் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

Related Stories: