மோகன்லால், திரிஷா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

திருவனந்தபுரம்: மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘திரிஷ்யம்’,‘திரிஷ்யம் 2’,‘டுவெல்த் மேன்’ஆகிய படங்கள் வெற்றிபெற்றன. இப்படங்களுக்கு முன்பு மோகன்லால், திரிஷா முதல்முறையாக ஜோடி சேரும் ‘ராம்’என்ற படத்தை ஜீத்து ஜோசப் இயக்கத் தொடங்கினார்.

படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருந்ததால், ெகாரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ‘ராம்’படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

‘மூன்று வருடங்களுக்குப் பிறகு‘ராம்’படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் தொடங்கியுள்ளது. பிறகு இங்கிலாந்து, மொராக்கோ, லண்டன், துனிசியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. படம் ஓடிடியில் வெளியாகுமா, தியேட்டருக்கு வருமா என்று இப்போது சொல்ல முடியாது’என்று ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

Related Stories: