கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி முழுமையாக குணமடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய விழைகிறேன். விரைவில், மீண்டும் வழக்கம்போல தனது பணிகளில் ஈடுபடுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: