திருப்பதி கோயிலில் பிளாக்கில் தரிசன டிக்கெட் விற்ற 6 பேர் கைது

திருமலை: திருப்பதியில் தரிசன டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்ற தேவஸ்தான கண்காணிப்பாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முறைகேடாக டிக்கெட் பெற்று, பக்தர்களுக்கு  அதிக விலைக்கு விற்பனை  செய்து வருவது அதிகரித்துள்ளது. தேவஸ்தானத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுனாவும், சில ஊழியர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிந்தது. 760 விஐபி தரிசன டிக்கெட், 350 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், 25 சுப்ரபாதம் சேவை டிக்கெட்டுகள் மற்றும் 32 அறைகள் பெற்று பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு இவர்கள் விற்றுள்ளனர். இதில், பல லட்சம் ரூபாய் கைமாறியது. இந்த மோசடி தொடர்பாக மல்லிகார்ஜுனாவும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலர்  கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

Related Stories: