விமானத்தில் சிகரெட் பிடித்த பாடி பில்டர்: விசாரணைக்கு உத்தரவு

புதுடெல்லி: பறக்கும் விமானத்தில் பாடி பில்டர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியானது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக ஒன்றிய அமை ச்சர் தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து டெல்லிக்கு கடந்த ஜனவரி 20ம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்ற பிரபல பாடி பில்டர் பாபி கட்டாரியா, விமான இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலானது. இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ‘விமானத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமானத்தில் ஏறும் போது புகைபிடித்த சம் பவம் நடந்துள்ளது. கேபின் குழு உறுப்பினர்கள் போர்டிங் நடைமுறையை முடிப்பதில் மும்முரமாக இருந்தனர். விசாரணைக்குப் பிறகு, அந்த பயணிக்கு பிப்ரவரியில் 15 நாட்களு க்கு பயணிக்க தடை விதி க்கப்பட்டது,’ என கூறியிருந்தது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, பயணிகள் விதிகளை மீறினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்ய அதிகாரம் உள்ளது. இதுதொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியானது. இதற்கு பதிலளித்து ஒன்றிய விமான போக்குவரத்துறை அமைச்சர் சிந்தியா கூறுகையில், ‘இதுபற்றி விசாரிக்கிறோம். இதுபோன்ற அபாயகரமான நடத்தையை சகிக்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: