இமாச்சல் பாஜ அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; காங். தாக்கல்

சிம்லா: இமாச்சலப்பிரசே சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று  எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜ அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முன்மொழிந்தனர். காங்கிரஸ் கட்சியின் 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்எல்ஏவும் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக நோட்டீஸ் அளித்தனர். கூட்டத்தொடரில் 4 முன்னாள் எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்கள். நோட்டீஸ் குறித்த முடிவை பின்னர் தெரிவிப்பதாக சபாநாயகர் விபின் பார்மர் தெரிவித்தார். எனினும் அதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

Related Stories: