டெல்லியில் அதிக கொரோனா; பள்ளிகளை மூட எதிர்ப்பு

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த பள்ளிகள், கடந்த ஏப்ரல் மாதம்தான் திறக்கப்பட்டது. இந்த சூழலில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதனால், மாணவர்கள் இடையே பரவல் அதிகரிப்பதை தவிர்க்க பள்ளிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

ஆனால், பள்ளிகளை மூடக்கூடாது என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்தல், நோய்வாய்ப்பட்ட மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட விரிவுரைகளை அனுப்புதல் மற்றும் ஆய்வுப் பயணங்களை நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

Related Stories: