பூவிருந்தவல்லி அருகே சொந்த வீட்டில் 500 சவரன் நகை திருட்டு: 2 பேர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி முத்து நகரில் ராஜேஷ் என்பவர் வீட்டில் 500 சவரன் நகை, ரூ.30 லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் அவரது அண்ணன் சேகர் (40), பெண் நண்பர் ஸ்வாதி (22) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூவிருந்தவல்லி பகுதியில் சேகர் பேக்கரி நடத்தி வருகிறார். இவருடன் தம்பி ராஜேஷ் மற்றும் அவரது தாயார் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் வைத்திருந்த 300 சவரன் நகை மற்றும் தாயின் 200 சவரன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராஜேஷ் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் போலீசார் ராஜேஷின் அண்ணன் சேகரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக தோழி ஸ்வாதியிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஸ்வாதிக்கு காரும் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சேகர் மற்றும் அவரது தோழி ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்து நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: