புரோ கபடி லீக் வீரர்கள் ஏலம்: செராவத்தை ரூ2.26 கோடிக்கு வாங்கிய தமிழ் தலைவாஸ்

மும்பை: 12 அணிகள் பங்கேற்கும் 9வது புரோ கபடி லீக் போட்டி விரைவில் நடக்க உள்ளது. இதற்கான வீரர்களின் 2 நாள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் 500 வீரர்கள் உள்ளனர். முதல்நாளான நேற்று 9 சீனியர் வீரர்கள் உள்பட பலர் ஏலம் எடுக்கப்பட்டனர். அதிகபட்சமாக நட்சத்திர ரெய்டர் பவான் செராவத்தை தமிழ்தலைவாஸ் அணி ரூ.2.26 கோடிக்கு ஏலம் எடுத்தது. புரோ கபடி வரலாற்றில் ஒரு வீரரின்அதிகபட்ச ஏலத்தொகை இதுதான்.

விகாஸ் கன்டோலாவை ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு புல்சும், பாஸல் அட்ராசலியை ரூ.1.38 கோடிக்கு புனேரி பால்டனும் எடுத்தன. 23 வயதான ரெய்டர் குமன்சிங்கை 1.22 கோடி ரூபாய்க்கு யு மும்பா வாங்கியது. பிரதீவ் நர்வாலை 90 லட்சத்திற்கு யு.பி.யோத்தாவும், சச்சினை 81 லட்சத்திற்கு பாட்னா, அஜித்குமாரை 66 லட்சத்திற்கு ஜெய்ப்பூர், மன்ஜித்தை 80 லட்சத்திற்கு அரியானா, அபிஷேக் சிங்கை 60 லட்சத்திற்கு தெலுங்கு டைட்டன்ஸ், தீபக்நிவாஸ் கூடாவை 43 லட்சத்திற்கு பெங்காலும் ஏலம் எடுத்தன.

தெலுங்கு டைட்டன்ஸ், டிஃபென்டர் சுர்ஜித் சிங்கை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கியது. சந்தீப் நர்வாலை யாரும் ஏலம் எடுக்கவில்லை. இன்று 2வது நாளாக ஏலம் நடக்கிறது.

Related Stories: