டி20 உலகக் கோப்பை பேட் கம்மின்ஸ் ‘டவுட்’

சிட்னி: வரும் 2026ல் இந்தியா, இலங்கை நாடுகளில் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிகளில் ஆடும் ஆஸ்திரேலியா அணியில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான பேட் கம்மின்ஸ் ஆடுவது சந்தேகமே என, ஆஸி கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

அவரது முதுகில் வலி இருப்பதாலும், அதனால் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் பயிற்சியாளர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா டி20 அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தற்போது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: