மெல்போர்ன்: நாளை துவங்கவுள்ள ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் ஆஸி அபாரமாக வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், 4வது டெஸ்ட், பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக, நாளை (26ம் தேதி) துவங்க உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி பட்டியல் நேற்று வெளியானது. அதில், நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (30) பெயர் இடம்பெறவில்லை. வலது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அடுத்த இரு போட்டிகளில் அவர் ஆடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, கஸ் அட்கின்சன் இங்கி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், ஒல்லி போப்பிற்கு பதில், ஜேகப் பெத்தேல் அணியில் இடம்பெற்றுள்ளார்.
