இளம்பெண் பலாத்கார வழக்கில் ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் கைதாகிறார்?.. முன்ஜாமீன் மனு தள்ளுபடி

 

ஜெய்ப்பூர்: இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளின் முன் ஜாமீன் மனுவை ராஜஸ்தான் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், கடந்த 2024ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 18வது சீசன் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 15 போட்டிகளில் 13 விக்கெட்டிகளை கைப்பற்றினார். இதனையடுத்து ஐபிஎல் தொடரின் 16வது சீசனுக்கான ஆர்சிபி அணியிலும் அவர் தனது இடைத்தை தக்க வைத்துள்ளார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளம் பெண் அளித்த பாலியல் புகாரின்பேரில் யாஷ் தயாள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறார். முன்னதாக யாஷ் தயாளின் இடைக்கால ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததுடன், இந்த வழக்கில் காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு விதிக்கவும் மறுப்பு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அவர் உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது. இந்நிலையில், தற்போது ராஜஸ்தானில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக யாஷ் தயாள் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது. மனு மீதான விசாரணையின் போது ​​நீதிபதி அல்கா பன்சால், கிரிக்கெட் வீரர் மீதான குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்றும், அவருக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறியதுடன், அவரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் யாஷ் தயாள் கைது செய்யப்படும் சூழலும் உருவாகியுள்ளது. ஒருவேளை யாஷ் தயாள் கைது செய்யப்படும்பட்சத்தில் அவர் சிறை செல்வதுடன், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழப்பார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: