அதிமுகவிடம் வாய்க்கொழுப்பு வேண்டாம் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்: சீமானுக்கு ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: வாய்க்கொழுப்பை அதிமுகவிடம் காட்டினால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீமானுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் இன்று அல்ல, நாளை அல்ல உலகம் முழுவதும் என்றும் போற்றப்படக்கூடிய தலைவர். அவருக்கு நினைவுச் சின்னம் தொப்பியும், கண்ணாடியுமாம். தமிழன் ஏற்றம் பெறுவதற்கும், தலை நிமிர்ந்து நிற்பதற்கும் காரணம் அண்ணா. அவருடைய நினைவுச் சின்னத்தை மூக்குப்பொடி டப்பா என்பதா. ஜெயலலிதாவை பொறுத்தவரையில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொண்ட தலைவர். ஜெயலலிதாவுக்கு மேக்கப் செட்டாம். இப்படி பேச சீமானுக்கு எவ்வளவு வாய் கொழுப்பு இருக்கிறது பாருங்கள்.இந்த வாய்க்கொழுப்பைத் தயவு செய்து வேறு யாரிடமும் காட்டுங்கள். அதிமுகவிடம் காட்டாதீர்கள். காட்டினால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

Related Stories: