என்எல்சியில் 75% தமிழர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 75% பேரை நியமிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்அறிக்கை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இயந்திரவியல், மின்னியல், கட்டிடவியல், சுரங்கவியல், வேதியியல், நிலத்தியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 299 பொறியாளர்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும், இந்த 299 பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 75% பொறியாளர்கள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

Related Stories: