காமன்வெல்த் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா, கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் நேற்று கனடாவை எதிர்கொண்டது.
தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி கனடா கோல் பகுதியை முற்றுகையிட்ட இந்திய அணிக்கு 3வது நிமிடத்தில் சலிமா டெடே, 22வது நிமிடத்தில் நவ்னீத் கவுர் அபாரமாக கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய கனடா அணிக்கு ஸ்டேர்ஸ் 23வது நிமிடத்திலும், ஹன்னா 39வது நிமிடத்திலும் கோல் போட்டு 2-2 என சமநிலை ஏற்படுத்தினர்.