பெங்களூரு: முன்னாள் முதல்வரின் மனைவியான நடிகை ராதிகா, நடனம் ஆடும் போது திடீரென கீழே விழுந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான எச்டி குமாரசாமி, கடந்த 2010ம் ஆண்டு கன்னட நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவர் ராதிகா குமாரசாமி என்று அழைக்கப்பட்டார். சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த ராதிகா, சமூக ஊடகங்களில் தனது அன்றாட வாழ்க்கையின் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துகொள்வார். அதன் மூலம் தனது ரசிகர்களை தன்வயப்படுத்தி உள்ளார்.