கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் மறுவாக்கு பதிவையும் மலைக்கிராம மக்கள் புறக்கணித்ததால் வாக்குச்சாவடி மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சாம்ராஜ் மக்களவைத் தொகுதியில் உள்ள இண்டிகநத்தா, தேக்கனே மென்தெரா, துளசி கரை ஆகிய கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என கூறி வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள் சமாதன பேச்சுவார்த்தையை அடுத்து இண்டிகநத்தா கிராமத்தில் மட்டும் 9பேர் வாக்களித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இண்டிகநத்தா வாக்குச்சாவடி மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மறுவாக்குப் பதிவையும் கிராம மக்கள் புறக்கணித்துள்ளதால் வாக்குச்சாவடி மையம் வெறிசோடி காணப்படுகிறது. வாக்குச்சாவடி மையம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வீடுகளை பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

The post கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: