பிரபல ஓவியர் அச்சுதன் கூடலூர் மரணம்

சென்னை: பிரபல ஓவியர் அச்சுதன் கூடலூர் (77) சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கூடலூரில் 1945ல் பிறந்த அவர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார். சிவில் இன்ஜினியரிங் பட்டதாரியான அவர், அரூப ஓவியக்கலையில் புகழ்பெற்றவர். இந்தியாவிலும், வௌிநாடுகளிலும் பல ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். க்ரியா ராமகிருஷ்ணன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், சி.மோகன் உள்ளிட்ட நவீன தமிழ் இலக்கியவாதிகளுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது மறைவு ஓவிய படைப்புலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அகாடமி விருது, தமிழ்நாடு லலித் கலா அகாடமி விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1972ல் பிரிட்டிஷ் கவுன்சிலின் வருடாந்திர ஓவியக் கண்காட்சியில், மெட்ராஸ் ஆர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களின் ஓவியங்கள் இடம்பெற்றன. அப்போது அச்சுதன் கூடலூரின் இரண்டு படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

Related Stories: