பெண்களை ஏமாற்றி பாலியில் தொந்தரவு: பாஜக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரை: சினிமாவில் வாய்ப்புத் தருவதாக கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியில் தொந்தரவு அளித்தாக பாஜக நிர்வாகி மீது அவரது மனைவியே புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.  பாலியல் குற்றச்சாட்டுக்கு  ஆளாகி இருப்பவர் பாரதிய ஜனதாவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மதுரை மாவட்ட புற நகர் செயளாலராக உள்ள மோனேஷ் பாபு ஆவார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பவர் புவனேஷ் பாபுவின் மனைவியான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நந்தினி என்பவர் ஆவார்.

 இருவருக்கும் சமூக வளைதலம் மூலம் பழக்கம் ஏற்பட்டு 2020 ல் திருமணம் செய்து கொண்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். திருமங்கலத்தில் வசித்து வந்த நிலையில் தம்மை சினிமா இயக்குநர் என்று கூறிக்கொண்டு பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக அத்து மீறியதாக மோனேஷ் பாபு மீது அந்த பெண் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தன்னிடம் இருந்த 52 சவரன் நகையை பறித்து கொண்டது தொடர்பாக நந்தினி அளித்த புகாரில் சில மாதங்களுக்கு முன்பு புவனேஷ் பாபு கைது செய்யப்பட்டார்.

ஆனால் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அவர் வெளியே வந்து விட்டதாக நந்தினி குறிப்பிட்டுள்ளார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி 100-க்கும் பெண்களை வரவழைத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டார் என்றும் பல ஆடியோக்கள், வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாக நந்தினி என்பவர் கூறியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகாரை அடுத்த  மோனேஷ் பாபு பாரதிய ஜனதா நிர்வாகி விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: