பாபா வாங்காவின் அடுத்தடுத்த கணிப்புகள்

புதுடெல்லி: பாபா வாங்கா ஏற்கனவே கணித்தபடி இந்த ஆண்டில் 2 கணிப்புகள் பலித்து விட்ட நிலையில், இந்தியாவில் 50 டிகிரியாக வெயில் அதிகரிக்கும், ஏலியன்கள் பூமியில் ஆய்வு செய்ய வருவார்கள் என்பதே அவரது அடுத்த கணிப்பாக உள்ளன.பல்கேரியாவைச் சேர்ந்த மூதாட்டி பாபா வாங்கா. இவருக்கு 12 வயதாக இருக்கும் போது, மின்னல் தாக்கி கண் பார்வையை முழுவதுமாக இழந்தார். அதன்பின் அவருக்கு எதிர்காலத்தை உணரும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை பாபா வாங்கா உணர்ந்துள்ளார்.

அவற்றை அவர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இவர் 1996ல் இறந்து விட்டார். ஆனாலும், பாபா வாங்காவின் 85 சதவீத கணிப்புகள் உண்மையிலேயே நடந்துள்ளதால் உலகம் இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

செர்னோபிள் அணு உலை கசிவு, இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு போன்ற பல விஷயங்களை பாபா வாங்கா கணித்துள்ளார். அதன்படி 2022ல் அவர் ஆசியாவில் உள்ள பல நகரங்களில் பெரிய வெள்ளம் ஏற்படும் என கணித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த ஆண்டு வெள்ளம் வந்துள்ளது. இந்தியாவில் குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வாங்கா பனிக்கட்டியில் கண்டறியப்படும் புதிய வைரஸ் உலகை தாக்கும் என கூறி உள்ளார்.

அதன்படி சீன ஆய்வாளர்கள் திபெத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் பனிக்கட்டியில் புதைந்த பழங்கால வைரஸ்களை கண்டறிந்துள்ளனர். 33 வகையான வைரஸ்களில் 4ன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இவை 14,400 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என சீன ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். வாங்காவின் இந்த கணிப்புகள் நடந்துள்ளதால், அடுத்ததாக இந்தாண்டில் நடக்கும் என அவர் கணித்துள்ள கணிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் அவர், 2022ல் இந்தியாவில் 50 டிகிரியாக வெயில் அதிகரிக்கும் என்றும், அதனால் வெட்டுக்கிளிகள் படை எடுக்கும் என கூறி உள்ளார். மேலும், ஏலியன்கள் வாழ்விடம் தேடி பூமியில் ஆய்வு மேற்கொள்ள வருவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என கணித்துள்ளார். மக்கள் அதிக நேரம் திரை முன்பாக இருப்பார்கள் என விர்சுவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: