டார்ஜிலிங்கில் வாக்கிங் பானி பூரி தயாரித்த மம்தா

டார்ஜிலிங்: டார்ஜிலிங் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாலையோர கடையில் பானி பூரி தயாரித்து குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிக்கு வழங்கினார். கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் டார்ஜிலிங் சென்றார். நேற்று காலை நேபாளி கவிஞர் பானுபக்தா ஆச்சார்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். டார்ஜிலிங் மலையில் நேற்று அவர் நடை பயணமாக, சண்டே ஹாட் எனப்படும் சுய உதவி குழுவின் பெண்களால் நடத்தப்படும் உணவு கடைக்கு சென்றார்.

அங்கு அவர்களுடன் சேர்ந்து பானி பூரி தயாரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பெண்களின் கடின உழைப்பை மம்தா பாராட்டினார். பின்னர், அங்குள்ள குழந்தைகளை தூக்கி மகிழ்ந்து, பானி பூரி கொடுத்தார். காய்கறி கடைகளுக்கு சென்று பார்வையிட்டார். கடந்த முறை டார்ஜிலிங் மம்தா வந்தபோது, ஒரு சாலையோர கடையில் பிரபலமான திபெத்திய உணவான ‘மோமோ’ செய்தார். இதேபோல், 2019ம் ஆண்டில், கடல் ரிசார்ட் நகரமான திகாவிலிருந்து கொல்கத்தா திரும்பியபோது, ​​அவர் ஒரு கடையில் தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

Related Stories: