பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் தியாக திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மசூதி தெருவில் உள்ள ஜாமித் ஆ மஸ்ஜித் பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் அதிகாலையே குளித்து புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அரசின் விதிமுறைகளான சமூக விலகலை கடைபிடித்து தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஊத்துக்கோட்டை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலையில் உள்ள மசூதி மற்றும் கோட்டை மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகைகள் நடத்தினர். இதேபோல் பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். தொடர்ந்து மசூதிகளில் ஒவ்வொருவரும் கட்டிதழுவி பக்ரித் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

Related Stories: