பெண்களையும், குடும்பங்களையும் காப்பாற்ற பாஜ ஆளும் மாநிலங்களில் மதுக்கடைகளை மூடணும்; உமா பாரதி திடீர் போர்க்கொடி

போபால்: பாஜ ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பாஜ மூத்த தலைவர் உமாபாரதி திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜ மூத்த தலைவருமான உமா பாரதி, இந்த மாநிலத்தில் மதுக்கடைகளை மூடும்படி வலியுறுத்தி வருகிறார்.

இதற்காக, மதுக்கடைகள் முன்பாக தானே முன்னின்று போராட்டங்கள் நடத்துவதோடு, கடைகளையும் அவரே அடித்து நொறுக்கி வருகிறார். இந்நிலையில், பாஜ.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு உமாபாரதி எழுதியுள்ள கடிதத்தில், ‘மது கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மபி.யில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும். பெண்களையும், குடும்பங்களையும் காப்பாற்ற பாஜ ஆளும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒருங்கிணைந்த மதுக் கொள்கையை உருவாக்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: