சிரஞ்சீவியின் காட்ஃபாதர் வீடியோ ரிலீஸ்

ஐதராபாத்: சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்துக்கான பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இதில் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ் உள்பட பலர் நடித்தார்கள். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். படத்துக்கு காட்ஃபாதர் என தலைப்பிட்டுள்ளனர். ஜெயம் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாரா நடிக்கிறார். மலையாளத்தில் கவுரவ தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். இதில் அந்த கேரக்டரில் சல்மான் கான் நடிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டது. அரசியல் கட்சி கொடி பறக்க, தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்க காரில் வந்து சிரஞ்சீவி இறங்குவதுபோன்ற காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது. சிரஞ்சீவி கடைசியாக நடித்த சைரா நரசிம்ம ரெட்டி, ஆச்சார்யா ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இந்த படத்தை அவர் அதிகம் எதிர்பார்த்திருக்கிறார்.

Related Stories: