குரங்கு பொம்மை முகமூடி அணிந்து துணிகரம் கிராம வங்கியில் ரூ.4.15 கோடி தங்க நகைகள் கொள்ளை: வெல்டிங் தீயில் ரூ.7.30 லட்சம் கருகியது

திருமலை: தெலங்கானாவில் உள்ள கிராமிய வங்கியில் குரங்கு ெபாம்மை முகமூடி அணிந்து ரூ.4.15 கோடி நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் புசாபூரில் கிராமிய வங்கி உள்ளது. முதல்மாடியில் இயங்கி வரும் இந்த வங்கியின் பக்கத்து கட்டிடத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளது. நேற்றுமுன்தினம் வழக்கம்ேபால் வங்கியை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது வங்கியின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு ெதரிவித்தனர். அதன்பேரில் நிஜாமாபாத் போலீஸ் கமிஷனர் நாகராஜூ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வங்கிக்குள் சென்று சோதனை செய்தனர்.

அங்கு வெல்டிங் கருவிகள், காஸ் சிலிண்டர், குரங்கு பொம்மை முகமூடி ஆகியவை கிடந்தது. இதையடுத்து மோப்ப நாய் வரவழைத்து சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய், சம்பவம் நடந்த வங்கியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சோன்பேட்டை சாலையில் உள்ள மறைவான இடத்தில் சென்று நின்றது. விசாரணையில், காஸ் சிலிண்டர் கட்டர் வைத்து வங்கி ஸ்டிராங் ரூமை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.4.15 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது. மேலும் காஸ் வெல்டிங் செய்தபோது ஏற்பட்ட தீயில் ரூ.7.30 லட்சம் பணம் கருகியுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கமிஷனர் நாகராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். ஆனால் கொள்ளையர் உருவம் எதுவும் பதிவாகவில்லை. கொள்ளையர்கள் பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து வங்கி கட்டிடத்திற்குள் குதித்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முதலில் அவர்கள் இரும்பு ஷட்டர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்த கேமராக்களின் இணைப்பு, அலார இணைப்புகளை துண்டித்ததோடு குரங்கு பொம்மை முகமூடி அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லாக்கரை உடைப்பதற்காக தாங்கள் கொண்டு சென்ற காஸ் சிலிண்டர் மற்றும் கட்டர் கொண்டு பற்ற வைத்து இரும்பு லாக்கரை திறந்துள்ளனர். அதில் இருந்த ரூ.4.15 கோடி மதிப்புள்ள சுமார் 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அதில் இருந்த ரூ.7.30 ரொக்கம் தீயில் கருகியுள்ளது. இந்த கொள்ளையில் வடமாநில கும்பலை சேர்ந்த 4க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்டில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: