கோடுவெளி ஊராட்சியில் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணிகள்: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கோடுவெளி ஊராட்சியில் ₹68 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூர்வாரும் பணிகளை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார். தமிழக அரசு நீர்வளத்துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் சேமிக்கும் விதமாக ஏரிகள் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடுவெளி ஊராட்சியில் சுமார் 240 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி தூர்வாரும் பணிக்காக ₹68 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.  

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் தலைமை வகித்தார். எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி வரவேற்புரையற்றினார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கல் பாஸ்கர், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு ஏரி துர்வாரும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

முன்னதாக அனைவரையும் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் எம்.குமார் வரவேற்றார். இதில் உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணன், உதவி பொறியாளர் செல்வகுமாரி, ஊராட்சி செயலர் தாட்சாயிணி, ஒன்றிய நிர்வாகிகள் உமா சீனிவாசன், எஸ்.ரகு, வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், பிரசாத், நிர்வாகிகள் கிளை செயலாளர் எம்.நாராயணன், ஏழுமலை, எம்.ரஞ்சித், சம்பத்குமார், கோபி, ராமமூர்த்தி, உள்பட அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரத்குமார் நன்றி கூறினார்.

Related Stories: