பயணிகள் அலறல் 5000 அடி உயரத்தில் விமானத்தில் புகை: 15 நாளில் 5வது சம்பவம்

புதுடெல்லி: டெல்லியில் இருந்து  ஜபால்பூர் புறப்பட்டு சென்ற தனியார் விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்திற்குள் புகை வந்ததால் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம், ஜபால்பூர் நோக்கி பயணிகளுடன் நேற்று காலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. 5 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்திற்குள் திடீரென புகை ஏற்பட்டது.

இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், விமானத்தை தரையிறக்குவதற்கு விமானி முடிவு செய்தார். உடனடியாக விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திரும்பியது. அங்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக வெளியேறினார்கள். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் அவசரமாக தரையிறங்குவது கடந்த 15 நாட்களில் 5வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories: