அன்னிய செலாவணி கையிருப்பு குறைவதால் தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

புதுடெல்லி: நாட்டில் தங்கம் இறக்குமதி திடீரென அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே மே மாதம் 13 டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த மே மாதம் தங்கம் இறக்குமதி 677 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று அளி்தத பேட்டியில், ``இந்தியாவில் அதிகளவிலான தங்கம் கிடைப்பதில்லை என்பதால் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுகிறது.

இதை தடுக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தற்போது 7.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதனுடன், வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான செஸ் வரி 2.5 சதவீதம் சேர்க்கப்படும். ஆக மொத்தம், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்த்தப்படும்.  இது, கடந்த மாதம் 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது,’’ என்றார்.

Related Stories: