போதை வழக்கில் ஆதாரமில்லை முடக்கப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; ஷாருக்கான் மகன் கோர்ட்டில் மனு

மும்பை: போதை வழக்கில் ஆதாரமில்லை என்று கூறப்பட்டதால் முடக்கப்பட்ட தனது பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைக்குமாறு ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன்  ஆர்யன் கான் (24) கடந்தாண்டு அக்டோபர் தொடக்கத்தில், சொகுசு கப்பலில் சென்ற போது போதை பொருள் வழக்கில்  கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட்டும் நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்டது.

கிட்டத்திட்ட 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த  ஆர்யன்கான், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் போதைப் பொருள்  தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன்  கான் மீதான குற்றச்சாட்டில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவரை  வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறியது.

இந்த நிலையில் தனது பாஸ்போர்ட்டை  திருப்பி ஒப்படைக்குமாறு ஆர்யன்கான் நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளார். இவரது மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு போதைபொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விஷயத்தை வரும் 13ம் தேதி விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: