மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..மஞ்சள் அலெர்ட் விதித்தது இந்திய வானிலை மையம்..!!

டெல்லி: மும்பையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் சிகான் -பத்ரா இணைப்பு சாலை, தாதர் ரீடி பகுதியில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று காலையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. மும்பையில் நேற்று 119.09 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மும்பைக்கு இன்றும், நாளையும் மஞ்சள் அலெர்ட் விதித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்காட், ரத்னகிரியில் மிகவும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: