புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி :புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் மற்றும் 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப் - 1 செயற்கைகோள் என 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டது.

பூமியில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடம் 10 வினாடிகளில் 570 கி.மீ தூரத்தில் முதன்மை செயற்கைக்கோளான டிஸ்-இஓ செயற்கைக்கோள் திட்டமிட்ட அதன் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, நியூசர் செயற்கைக்கோள் 19 நிமிடம் 20 வினாடிகளிலும், ஸ்கூப் 1 செயற்கைக்கோள் 19 நிமிடம் 22 வினாடிகளில் அடுத்தடுத்து அதன் இலக்கில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரோவை பாராட்டும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் புதிய தொழில் நிறுவனங்களின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக செலுத்தி பி.எஸ்.எல்.வி. சி-53 மிஷன் சாதனை படைத்துள்ளது. இதற்கு எனது பாராட்டுக்கள். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய நிறுவனங்கள் விண்வெளியை எட்டும் என்று நான் நம்புகிறேன்,எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: