ஊட்டி தமிழகம் மாளிகையில் சிறுத்தை

ஊட்டி: ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகை பகுதியில் சிறுத்தை உலா வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை, கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஊட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான தமிழகம் மாளிகை பகுதியில் ஒரு சிறுத்தை தினமும் வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது தமிழகம் மாளிகை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வருவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 இந்த சிறுத்தையால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் முன் அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: