முதல் முறையாக ரூபாய் மதிப்பு 79 ஆக சரிந்தது

புதுடெல்லி: உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உலக சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைகிறது. இந்நிலையில், நேற்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.85 ஆக இருந்த நிலையில், வர்த்தகம் முடிவில் மேலும் 18 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.03 ஆக சரிந்துள்ளது. நேற்று முன்தினம் 48 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. இதே போல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 0.34 சதவீதம் அதிகரித்து 118.38 டாலராக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், விரைவில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக சரிய வாய்ப்புள்ளது.

Related Stories: