கடலூர் மாவட்டத்தில் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் பிரம்மா (37), கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான மகேஷ் தினமும் குடித்து விட்டு வந்துள்ளார். மேலும், அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்தும் வந்துள்ளார். மனைவி வீட்டில் இல்லாதபோது, தனது 15 வயது மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம் மகள் என்றும் பாராமல் மகேஷ் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்துள்ளார்.நடுஇரவில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதுபற்றி உனது அம்மா மற்றும் வேறு யாரிடமாவது கூறினால் இருவரையும் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த 15வயது மகள் இதுபற்றி யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மகளின் நிலையை பற்றி அறிந்து தாய் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கூறி அழுதுள்ளார்.இந்த தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து தாய் மற்றும் மகளிடம் விசாரணை நடத்தினர். அதில் காமகொடூர தந்தையான மகேஷ் குற்றவாளி என்பது உறுதியானது. மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து, மகேஷ் பிரம்மாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: