கொரோனா பரவாமல் தடுக்க சுழற்சி முறையில் வகுப்பு: தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 624 பேரில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முககவசத்தை தமிழக அரசு கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இதர தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் தற்போது முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: