ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு

திருமலை :  ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்ட விழாவில், ‘சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது’ என்று முதல்வர் ஜெகன் மோகன் பேசினார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கொடி ராம்மூர்த்தி  மைதானத்தில் தாய் மடி திட்டத்தில் பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாயின் வங்கி கணக்கில் மூன்றாம் ஆண்டாக நிதி செலுத்தும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்  பங்கேற்று முதல்வர் ெஜகன்மோகன் பேசியதாவது:

கல்வி தான்  நமக்கு உண்மையான சொத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய  சக்தி படிப்பிற்குதான் உள்ளது. அனைவரது வீட்டிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்காக கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். நல்ல தரமான கல்வியை  வழங்குவதே எனது குறிக்கோள்.  ஜகன் அண்ணா தாய்மடி திட்டத்தை  செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது.

தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு ஏழை தாயின் கணக்கில் ₹15 ஆயிரம் நிதி செலுத்தப்படுகிறது. இதனால்  80 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். கடந்தாண்டு 40 லட்சம் தாய்மார்களின் கணக்கில் ₹6,595 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ஜெகன் அண்ணா தாய்மடி திட்டத்தின் கீழ் மட்டும் இதுவரை ரூ.19,618 கோடி பள்ளி செல்லும் பிள்ளைகளின் தாயின் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது.

 பொருளாதாரச் சிக்கலால்  குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 75% வருகை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு,  கழிவறை பராமரிப்பின்கீழ் குறைந்த தொகையாக ₹2,000 ஆண்டுக்கு வசூலிக்கப்படுகிறது. இதனையும் சிலர் விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: