ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவர் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய நேரடி வரிகள் வாரிய தலைவராக இருந்த மொகபத்ரா கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, வாரியத்தின் புதிய தலைவராக நித்தின் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1986ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரியான இவர், தற்போது இந்திய வருவாய் சேவையின் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் என்பது வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் தலைவரைத் தவிர சிறப்பு செயலாளர்கள் பதவியில் ஆறு பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

Related Stories: