ஒரே படத்தில் இத்தனை ஹீரோயின்களா? சல்மானுடன் இணையும் தென்னிந்திய நடிகைகள்

மும்பை: சல்மான் கானுடன் ஒரே படத்தில் தென்னிந்திய நடிகைகள் 5 பேர் இணைந்து நடிக்க உள்ளனர்.சல்மான் கான், அனில் கபூர், பர்தின் கான், பிபாஷா பாசு, லாரா தத்தா நடித்த படம், ‘நோ என்ட்ரி’. அனீஸ் பாஸ்மி இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாவது பாகம், ‘நோ என்ட்ரி மே என்ட்ரி’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதிலும் சல்மான் கானுடன் அனில் கபூர் நடிக்க உள்ளார். மற்றொரு ஹீரோவாக நடிப்பவர் முடிவாகவில்லை. அதே நேரம், ஹீரோயின்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஒரே படத்தில் 5 தென்னிந்திய ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அதிலும் தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற அந்த ஹீரோயின்கள் இந்தப் படம் மூலம் இணைய உள்ளனர். பூஜா ஹெக்டே, சமந்தா, ராஷ்மிகா, ரகுல் பிரீத் சிங், தமன்னா ஆகியோர்தான் அந்த ஹீரோயின்கள். இப்படத்தில் நடிக்க ரகுல் பிரீத் சிங், பூஜா ஹெக்டே தேர்வாகிவிட்டதாகவும்; சமந்தா, ராஷ்மிகா, தமன்னா ஆகியோரை ஆடிஷன் எடுத்துப் பார்த்துவிட்டு தேர்வு செய்வது பற்றி சல்மான் கான் முடிவு எடுப்பார் என்றும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் இத்தனை தென்னிந்திய ஹீரோயின்கள் சல்மான் கானுடன் நடிப்பதால், பாலிவுட் ஹீரோயின்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories: