டிஎன்பிஎல் கிரிக்கெட் திண்டுக்கல்லை வீழ்த்தியது திருச்சி: இன்று 2 போட்டிகள்

நெல்லை: நெல்லையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது லீக் ஆட்டம் நேற்றிரவு திண்டுக்கல் டிராகன்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் இடையே நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்னேஷ் 32 ரன்கள் சேர்த்தார். கேப்டன் நிஷாந்த் 25, மோனிஷ் 24 ரன்கள் எடுத்தனர். திருச்சி அணி வீரர் அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் எடுத்து கலக்கினார்.

பின்னர் களமிறங்கிய திருச்சி அணியின் துவக்க வீரர்கள் அமித் சாத்விக் 20 ரன்களும், முரளி விஜய் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த நிதிஷ் ராஜகோபால் 64 ரன், ஆதித்ய கணேஷ் 37 ரன் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால் திருச்சி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. பிற்பகல் 3.15 மணிக்கு நடக்கும் 3வது ஆட்டத்தில் மதுரை பேந்தர்ஸ்-சேப்பாக் கில்லீஸ் அணிகளும், இரவு 7.15 மணிக்கு சேலம் ஸ்பார்டன்ஸ்-நெல்லை கிங்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Related Stories: